இங்கே முஸ்லிம்களும்,ஹிந்துக்களும் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறார்கள்,ஒற்றுமைக்கு சான்றாக திகழ்கிறது.
இங்கு பெரும்பாண்மையான மக்கள் வெளிநாட்டில் பொருள் ஈட்டி அன்னிய செலவாணி மூலம் நம் நாட்டிற்கு வருமானத்தை கொடுக்கிறார்கள்,
தோப்புத்துறை கிழக்கு கடற்கரை சாலையில் நாகப்பட்டினத்திற்கு சற்று தெற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் வேதரணியம் பேரூரிலிருந்து வடக்கே 2 கிலோ மீட்டர் அமைந்துள்ளது, இவ்வூருக்கு கிழக்கே வங்காள விரிகுடா கடலும், மேற்கே திருத்துரைப்பூண்டி, கட்டிமேடு மற்றும் கரியாப்பட்டினம் என்ற சிறிய கிராமமும்,35 கிலோமீட்டர் தொலைவில் முத்துப்பேட்டையும் அமைந்து உள்ளது.
இங்கு மொத்தம் 5 பள்ளிவாசல்கள், 4 மதரஸாக்கள், 2 அரபி பெண்கள் கல்லூரிகள், 3 அரசு பாடசாலைகள், 2 தனியார் ஆங்கில பாடசாலையும் மற்றும் மாற்று மத சகோதரர்களின் வழிபாட்டு தளங்களும் உள்ளன.
தோப்புதுறையிலிருந்து சுமார் 145 கி.மீ. தொலைவில் திருச்சியில் பன்னாட்டு விமான நிலையமும், 345 கி.மீ. தொலைவில் சென்னை அண்ணா விமான நிலையமும் உள்ளது.
தோப்புத்துறையில் சிறிய பண்டகச்சாலைகள் இருக்கும் போதிலும் தோப்புத்துறையின் வணிகத் தொடர்பு தலமாக விளங்குவது வேதரணியம் நகரம்.
தோப்புத்துறையில் மருத்துவமனை வசதி இல்லாததால் மருத்துவத்தை தேடி வேதாரணியம்,திருத்துரைபூண்டி மற்றும் நாகப்பட்டினம் செல்கிறார்கள்,வசதி படைத்தவர்கள் தஞ்சாவூர் மற்றும் சென்னைக்கும் செல்கிறார்கள்.
தோப்புத்துறையில் பிரதானமாக தொழில் என்று இருப்பது சொல்வதற்கு இல்லை. தோப்புத்துறையிலிருந்து தெற்கே 10கிலோமீட்டர் தொலைவில் கோடியக்கரை சரணாலாயம் உள்ளது,உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பலவகைப் பறவை இனங்கள் குறிப்பிட்ட சில காலங்களில் இங்கு வந்து தங்கி தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறது.
அருகில் உள்ள சுற்றுலா தளங்கள் 85 கி.மீ. தெலைவில் தஞ்சாவூரும்,வடக்கே 35 கி.மீ. தொலைவில் வேளங்கண்ணியும் சுற்றுலா தளங்களாக அமைந்துள்ளது.
வேதரணியத்திலிருந்து தமிழகம் முழவதும் இணைப்பு பேருந்துகள், திருத்துறைப்பூண்டியிலிருந்து இரயில்வே வசதியும் அமைந்துள்ளது.
சிறந்த கல்வி அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டு ஆண், பெண் இருபாலருக்கும் பயனமையும் வகையில் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பொழுதுள்ள நிலையில் கல்வியின் வளர்ச்சி சற்று வளர்ச்சியடைந்துள்ளதை காண முடிகின்றது.
ஆக்கம் : ஆதம்.ஆரிபின் (மண்ணடிகாக்கா)
…இன்ஷா அல்லாஹ்..தொடரும்…
No comments:
Post a Comment